பெஹல்காம் தாக்குதல்: ராஜ்நாத் சிங் உயர்நிலை ஆலோசனை!

Dinamani2f2025 04 232f8rage7n62frajnath Singh Speech Edi.jpg
Spread the love

ஜம்மு – காஷ்மீரின் பெஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி அனில் செளஹான் உள்பட ஆயுதப் படை உயரதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் ஜம்மு – காஷ்மீரின் பாதுகாப்பு நிலை குறித்தும், பாதுகாப்பை அதிகரிக்க மேலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

பாதுகாப்பு தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக இது குறித்து விவாதிக்கப்படும் என்பதால், பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

ஜம்மு – காஷ்மீரின் சுற்றுலா நகரமான பெஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று (ஏப். 22) சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிக்க | பெஹல்காம்: 35 தமிழர்கள் தில்லி திரும்பினர்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *