பெ.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி | P.Shanmugam Admitted on Hospital

1378056
Spread the love

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் காய்ச்சல், சளி பிரச்சினை காரணமாக நேற்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை டீன் சாந்தாராமனிடம் கேட்டபோது, ”பெ.சண்முகம் நலமுடன் உள்ளார். மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். 2 நாள் ஓய்வுக்கு பிறகு அவர் வீடு திரும்புவார்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *