“பேசில் ஜோசப்பும் நானும் உண்மையிலேயே நல்ல நண்பர்கள்!” – டொவினோ தாமஸ் |”Basil Joseph and I are really good friends!” — Tovino Thomas

Spread the love

அந்தப் பேட்டியில் டொவினோ, “பேசில் ஜோசப்பும் நானும் உண்மையிலேயே நல்ல நண்பர்கள். அவருக்காக எதையும் செய்ய நான் தயங்க மாட்டேன்.

பேசில், நான் சொல்லும் காமெடிகளை உடனடியாகப் புரிந்துகொள்வார். எங்கள் இருவருக்கும் இடையில் ஒருவருக்கொருவர் முட்டாள்தனமான ஜோக்குகளை விளக்க வேண்டிய அவசியம் இருக்காது.

அதுபோல, நாங்கள் எப்போதும் டிராமாட்டிக் உரையாடல்களைத் தவிர்க்க முயல்வோம்.

சொல்லப்போனால், எங்கும் நாங்கள் ஒருவரையொருவர் கிண்டல் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

‘நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்’ போன்ற உணர்ச்சிகரமான வார்த்தைகளை நாங்கள் சொல்லிக் கொள்வது அரிது.

சில விஷயங்களைப் பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். நாங்கள் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்திருக்கிறோம்” எனக் கூறியிருக்கிறார்.

பேசில் ஜோசப் இயக்கிய ‘கோதா’, ‘மின்னல் முரளி’ என இரண்டு படங்களிலும் டொவினோ தாமஸ்தான் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *