அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேசியதாவது…
“எங்களுடைய நிபந்தனைகளை ஈரான் ஒத்துக்கொள்ளவில்லை.
நல்ல நம்பிக்கையுடனும், ஒப்பந்தம் மேற்கொள்ளவும் வந்திருக்கிறோம் என்று அதிபர் கூறினார்.
ஆனால், அதற்கான வழி இங்கு எதுவும் இல்லை.

வரும் காலத்தில் ஈரான் எந்தவொரு அணு ஆயுதத்தையும் தயாரிக்கக் கூடாது. இப்போது இருக்கும் வசதியையும் அழிக்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால், அதில் அவர்கள் உடன்படுவதாக இல்லை.
எங்களுடைய நிபந்தனைகள் என்ன, எங்களுடைய ஒப்புதல்கள் என்ன என்பதை தெளிவாகக் கூறிவிட்டோம். ஆனால், அவர்கள் அதற்கு ஒத்துக்கொள்வதாக இல்லை.
பல விஷயங்கள் குறித்து ஈரானிடம் பேசினோம். அது நல்ல செய்தி.
ஆனால், எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை என்பது கெட்ட செய்தி.
இது அமெரிக்காவை விட, ஈரானுக்குத்தான் மிகுந்த கெட்ட செய்தி” என்று பேசியிருக்கிறார்.
ஈரானின் அரசு செய்தி நிறுவனம் டெலிகிராமில் குறிப்பிட்டுள்ளதாவது…
“ஈரான் மக்களின் தேசிய நலனுக்காக ஈரான் 21 மணி நேரம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.
ஈரானின் குழு பல முன்னெடுப்புகள் எடுத்தும், அமெரிக்காவின் காரணமில்லாத நிபந்தனைகள் பேச்சுவார்த்தையை முன்னோக்கி எடுத்து செல்லவில்லை.
அதனால்தான், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
ஒரே சந்திப்பில் ஒப்பந்தம் ஏற்பட்டுவிடும் என்கிற எதிர்பார்ப்பு யாருக்கும் இருக்காது” என்று தெரிவித்துள்ளது.