பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கிமில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி, பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அளித்து வஙகிசேவையை மார்ச் 15 முதல் நிறுத்தி உள்ளது .
ராஜினாமா
இந்த நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பவேஷ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்து இருக்கிறார். மேலும் மே 31 ந் தேதி வரை அவர் இந்த பதவியில் நீடிப்பார் என்று தெரிகிறது.
ஆதரவு
தொடர்ந்து அவர் தனது ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி தன்னுடைய ஆதரவு நிறுவனத்திற்கு தொடர்ந்து இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
அவரது ராஜிநாமா நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் மேலும் நிறுவனத்தின் சேவைகளில் இருந்து அவர் விடுவிக்கப்படுவார் என்றும் பேடிஎம் நிறுவனம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.