பேட்டிங்கில் ஆணவம் கூடாது, ஐபிஎல் வித்தியாசமானது..! விராட் கோலியின் பேட்டி!

Dinamani2f2025 04 092frcmb5sel2fap25097575944793.jpg
Spread the love

ஆர்சிபியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் பேட்டிங்கில் ஈகோ (ஆணவம்) இருக்கக் கூடாது எனக் கூறியுள்ளார்.

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய வீரர் அரைசதம் கடந்து முடிவில் 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இது விராட் கோலி 99-வது டி20 அரைசதமாகவும் ஐபிஎல்-இல் 57ஆவதாகவும் பதிவானது. இதன் மூலம், டி20 போட்டிகளில் 13,000 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக விராட் கோலி மாறினார்.

இது குறித்து ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி பேசியதாவது:

பேட்டிங்கில் ‘ஈகோ’ கூடாது

பேட்டிங்கில் ஈகோ (ஆணவம்) இருக்கக் கூடாது. யாரையும் நாம் அதிகமாக நிழலடிப்புச் செய்யவும் முயற்சிக்கக் கூடாது.

எப்போதும் போட்டியின் சூழ்நிலையை உணர்ந்து விளையாட வேண்டும். நான் எப்போதுமே சூழ்நிலைக்கு தகுந்தவாறுதான் விளையாடுவேன். இது குறித்து நானே என்னைப் பெருமையாக நினைப்பேன்.

நான் பேட்டிங்கில் நல்ல ரிதமில் இருந்தால் நானாகவே முன்னெடுத்து விளையாடுவேன்.

வேறு யாராவது நல்ல ரிதமில் விளையாடினால் அவர்கள் முன்னெடுத்து விளையாடுவார்கள்.

ஆர்சிபியில் பெரிய தொடக்கம் கிடைக்கவில்லை

முதல் 3 ஆண்டுகளில் எனக்கு ஆர்சிபியில் டாப் ஆர்டரில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதனால், ஐபிஎல் தொடரில் பெரிதாக தொடங்க முடியவில்லை. ஆனால், 2010 முதல் தொடர்ச்சியாக நன்றாக விளையாட தொடங்கினேன்.

பின்னர், 2011 முதல் தொடர்ச்சியாக நம்.3இல் களமிறங்கினேன். அப்போதுதான் எனது ஐபிஎல் வாழ்க்கை தொடங்கியது.

ஐபிஎல் வித்தியாசமானது

ஐபிஎல் தொடர் கட்டமைக்கப்பட்டிருக்கும் வித்தினால் அது தனித்துவமான மிகவும் சவலானதாக இருக்கிறது.

இது குறுகிய இருதரப்பு தொடர்களாக இல்லாமல், பல வாரங்களில் நடைபெறுகிறது. புள்ளிப் பட்டியலில் மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கும். அந்த மாற்றம் தொடர்ச்சியாக அழுத்தத்தை அளிக்கும்.

இதனால்தான் மற்ற தொடர்களைவிட ஐபிஎல் தொடரின் இயல்பு நம்மை மன ரீதியாக சவால் அளிக்கும். இதுதான் எனது டி20 திறமையை வளர்க்கிறது என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *