பேட்மிண்டன் வீராங்கனைக்கு ரூ.5 லட்சம்: துணை முதல்வர் வழங்கினார் | Deputy Chief Minister gives Rs 5 lakh to badminton player

Spread the love

சென்னை: ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை எஸ்.ஆர். தீக்ஷாவுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத் தொகையை துணை முதல் வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

சீனாவில் கடந்த அக்.21 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்ற பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்று தமிழக வீராங்கனை எஸ்.ஆர்.தீக்ஷா சாதனை படைத்துள்ளார்.

இதையடுத்து அவரை ஊக்கப்படுத்தும் விதமாக வீராங்கனை எஸ்.ஆர்.தீக்ஷாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் வாழ்த்து தெரிவித்து ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்வில் விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *