பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழியில் தமிழ்நாடு போராடும், வெல்லும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

Dinamani2f2025 05 232ftsggtzq52fanbil.jpg
Spread the love

பெரும்பிடுகு முத்தரையரின் 1350 ஆவது சதய விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், முத்தரையர் அமைப்புகள் திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சர்ருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முத்திரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.சேகரன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான தலைவர் அல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கான தலைவர். அவர் வழியில் தமிழுக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் தமிழ்நாடு போராடும்,தமிழ்நாடு வெல்லும் என கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *