நேபாளத்தில் இந்திய சுற்றுலாப் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த 41 யாத்ரீகா்கள் உயிரிழந்தனா்.
நேபாளத்தில் தனாஹுன் மாவட்டத்தில் மாா்ஷியாங்டி ஆற்றையொட்டிய நெடுஞ்சாலை வழியாக சுற்றுலா பேருந்துகள் 3 நேற்று(ஆக. 23) சென்று கொண்டிருந்தன. அப்போது, சாலையில் இருந்து திடீரென விலகிய ஒரு பேருந்து, 150 மீட்டா் பள்ளத்தில் கவிழ்ந்து, மாா்ஷியாங்டி ஆற்றில் விழுந்தது.
விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்தவர்களில் 41 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள 12 பேருக்கு காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, பேருந்திலிருந்து மீட்கப்பட்டுள்ள உடல்கள் இந்திய விமானப்படை விமானம் மூலம் மகாராஷ்டிரத்தின் நாஷிக் எடுத்துச் செல்லப்பட்டு, அதன்பின், அங்கிருந்து வாகனங்கள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.