பைக்கர்: 18 வயது இளைஞனாக மாறிய 41 வயது நடிகர்; '2 ஆண்டுக்கால கடின உழைப்பு' – நடிகர் சர்வானந்த்

Spread the love

இயக்குநர் அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில், மோட்டோகிராஸ் பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பைக்கர்’. இப்படத்திற்காக நடிகர் சர்வானந்த் மேற்கொண்ட அதிரடி உடல்மாற்றமும், அதன் பின்னணியில் உள்ள உழைப்பும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்ததிலிருந்து நடிகர் சர்வானந்த் உடல்மாற்றம் பேசப்பட்டு வருகிறது. 41 வயது நடிகர் எப்படி 18 வயது இளைஞர் போன்ற தோற்றத்துக்கு மாறினார் என்பது குறித்த கேள்விகள் அவரைப் பின் தொடர்ந்தன.

சர்வானந்த்
சர்வானந்த்

இந்த நிலையில், சமீபத்தில் அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில், தன் உடல் மாற்றம் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார். அவர் பேட்டியில், “பைக்கர் படத்தில் 18 வயது பைக் ரேஸராகத் தோன்றுவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக என் வாழ்க்கையையே மாற்றியமைத்தேன்.

தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து, ஓட்டம், நடைப்பயிற்சி, உடற்பயிற்சி எனப் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டேன். இந்தப் பயணம் எனக்கு எளிதாக இருக்கவில்லை. மன அழுத்தம் மற்றும் சுய சந்தேகம் எழுந்தபோது, ‘யோகா’ மூலம் மனதை அமைதிப்படுத்தி இலக்கை நோக்கிப் பயணித்தேன்.

சர்வானந்த்
சர்வானந்த்

இதன் விளைவாக, உடல் மெலிந்து, கட்டுக்கோப்பான ஒரு வீரரைப் போல மாறினேன். படப்பிடிப்பின் முதல் நாள் கண்ணாடியில் என்னைப் பார்த்தபோது, ஒரு ஒழுக்கமான, புதிய மனிதனை என்னால் பார்க்க முடிந்தது. நாம் எவ்வளவு சோர்ந்து போயிருந்தாலும், ஒரு சரியான முடிவு நம் வாழ்க்கையை அப்படியே மாற்றும் என்பதை இந்தப் பயணம் எனக்குக் கற்றுக்கொடுத்தது. ஏப்ரல் 3-ம் தேதி திரையில் ‘விக்கி’யைப் பார்க்கும்போது, அது வெறும் நடிப்பு மட்டுமல்ல, எனது இரண்டு ஆண்டுக்கால ரத்தம் மற்றும் வியர்வையின் பலன் என்பதை ரசிகர்கள் உணர்வார்கள்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *