அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீதான கொலை முயற்சியை தொழிலதிபர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.
புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள டிரம்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை (உள்ளூர் நேரம்) விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, மைதானத்துக்கு வெளியே இரண்டு நபர்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக டிரம்ப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அந்த நபர்கள் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு முயற்சி
எலான் மஸ்க் விமர்சனம்
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த ஒருவர், டொனால்டு டிரம்ப்பை ஏன் கொல்ல முயற்சிக்கின்றனர்? என்று எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதனைப் பகிர்ந்த மஸ்க், “பைடன் மற்றும் கமலாவை யாரும் கொல்வதற்கான முயற்சிகூட செய்யவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டிரம்ப்புக்கு, மஸ்க் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் பாதுகாப்பாக இருக்கிறார்! ஜோ பைடன்
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஏற்கனவே, ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் தோ்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்டிருந்தபோது அவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
அப்போது, அவருடைய வலதுகாதில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.