பொங்கல் அன்று யுஜிசி – நெட் தேர்வு!

Dinamani2fimport2f20142f42f62f102foriginal2fexam 2014.jpg
Spread the love

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காலத்தில் யுஜிசி – நெட் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேதியை மாற்றக் கோரியும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் தேசிய தேர்வு முகமை பொது இயக்குநர் பிரதீப் சிங் கரோலா ஆகியோருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த மாதம் பட்டயக் கணக்காளர் தேர்வுக்கான தேதியை பொங்கல் விடுமுறை காலத்தில் அறிவித்ததற்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, பின்னர் மாற்று தேதி அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15, 16 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் என்ன? முழு அறிக்கை தாக்கல்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சு. வெங்கடேசன் வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது:

“மத்திய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்?

மத்திய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் அறிவிக்கிற பல தேர்வுகள் பொங்கல் விடுமுறை நாள்களில் அறிவிக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது.

கடந்த மாதம்தான் பொங்கல் திருநாள் அன்று அறிவிக்கப்பட்டிருந்த பட்டய கணக்காளர் (CA) தேர்வு தேதியை போராடி மாற்றினோம். இப்பொழுது மீண்டும் இன்னொரு அறிவிப்பு வந்துள்ளது.

தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள “யுஜிசி – நெட்” தேர்வு அட்டவணையில் 30 பாடங்கள் மீதான தேர்வுகள் ஜனவரி 15, 16 தேதிகளில் வருகிறது.

ஜனவரி 14 அன்று பொங்கல், ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 உழவர் திருநாள் என தொடர் விடுமுறை இருந்தும் மேற்கண்ட தேதிகளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொங்கல் காலம் என்பது தமிழர்களுடைய பண்பாட்டோடு, உழவர் பெருமக்களின் உணர்ச்சிப்பூர்வமான கொண்டாட்டத்தோடும் தொடர்புடையதாகும்.

ஆகவே இந்த தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படுவது மிகப்பெரும் சிரமங்களை தங்களுக்கு தரும் என்று தேர்வர்களும், பெற்றோர்களும் என்னை தொடர்பு கொண்டு தலையீட்டை நாடி உள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதிய கடிதம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *