“பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000″ – தமிழ்நாடு அரசு அறிவித்த பொங்கள் கிப்ட் | “Rs. 3000 along with the Pongal gift hamper” – The Pongal gift announced by the Tamil Nadu government.

Spread the love

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி சேலைகள் அனைத்தும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000/- வழங்கிட மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இந்த அறிவிப்பு வெளியானபோது முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்! உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி இல்லத்தில் கொண்டாட்டமாக நிறைய, தமிழ்நாட்டிலுள்ள 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 வழங்குகிறது நமது திராவிடமாடல் அரசு!

பொங்கலோ பொங்கல்!” எனப் பதிவிட்டிருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *