பொங்கல் ரிலீஸ்: கார்த்தி படத்துக்கு க்ரீன் சிக்னல், குஷியாகும் ஜீவா, தள்ளிப் போகிறதா சந்தானம் படம்? | pongal release un expected movies list in 2026

Spread the love

தியேட்டர்களில் பொங்கல் திருவிழா களைகட்ட ரெடியாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் “பராசக்தி’ இப்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த 9ம் தேதி வெளியாக வேண்டிய விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருப்பதால், பல்வேறு படங்கள் பொங்கல் விருந்தாக திரைக்கு வர ரெடியாகி வருகின்றன. கார்த்தியின் ‘வா வாத்தியார்’, ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’, சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’, மற்றும் ‘ஜாக்கி’, ‘திரௌபதி 2’ ஆகிய படங்கள் பொங்கலுக்கு வருகின்றன என்கிறார்கள். கொஞ்சமும் எதிர்பாரா அதிரடியாக இன்னும் பல சின்ன பட்ஜெட் படங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெறும் என்கிறார்கள்.

ஜாக்கி படத்தில்

ஜாக்கி படத்தில்

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாவதாக அறிவிப்பு வெளியானது. நலன்குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் எனப் பலரும் நடித்துள்ளனர். தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட சில பிரச்னைகளால் பட வெளியீடு தள்ளிப் போனது. இன்றுகூட நீதிமன்ற அமர்வு நடந்திருக்கிறது. நீதிமன்றம் படத்திற்குத் தடை வித்திக்கவில்லை என்பதால், படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கெட் ரிசர்வேஷனும் விரைவில் ஆரம்பமாகிறது.

அதேபோல ஜீவாவின் நடிப்பில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ வெளிவரும் என அறிவித்துள்ளனர். மல்லுவுட் இயக்குநர் நிதிஷ் சஹதேவ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழுக்கு வருகிறார். ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன் எனப் பலரும் நடித்துள்ளனர். குடும்பங்களோடு சேர்ந்து அனைவரும் கொண்டாடும் வகையில், உணர்வுப்பூர்வ அம்சங்களுடன் காதல், காமெடி கலந்து கலக்கலான கமர்ஷியல் படமாக இருக்கும் என்கிறார்கள்.

விஜய்யின் ‘ஜனநாயகன்’ வெளியாகாத குறையைப் போக்க, ‘தெறி’ படத்தை ரீரிலீஸ் செய்கிறார் ‘தெறி’ படத்தின் தயாரிப்பாளரான தாணு. அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்ஷன் நடிப்பில் கடந்த 2016ல் ‘தெறி’ படம் வெளியாகி இருந்தது. தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக திரையை தொட்ட ‘தெறி’ இப்போது ஜனவரி 15-ல் வெளியாவதால், விஜய்யின் ரசிகர்கள் ‘தெறி’யை மீண்டும் கொண்டாட காத்திருக்கிறார்கள்.

மதுரையில் நடந்து வரும் கிடா சண்டையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘ஜாக்கி’. இதற்கு முன் ‘மட்டி’ என்ற படத்தை இயக்கிய டாக்டர் பிரகபல் இயக்கத்தில் யுவன் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ் நடிப்பில் உருவான இப்படமும் பொங்கலுக்குத் திரைக்கு வருகிறது.

இதற்கிடையே சந்தானத்தின் நடிப்பில் கடந்த 2016ல் ரெடியான படம் ‘சர்வர் சுந்தரம்’. அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார் . பல்வேறு பிரச்னைகளால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. இந்நிலையில் இப்படத்தையும் பொங்கலுக்குக் கொண்டு வர திட்டமிட்டனர். ஆனால், திரையரங்குகள் தரப்பிலிருந்து இன்னும் சில வாரங்கள் கழித்து வெளியிடுங்கள். தியேட்டர்கள் எல்லாம் கார்த்தி, ஜீவா படங்களுக்கு கொடுத்துவிட்டோம் என்கிறார்களாம். என்ன செய்யப் போகிறாரோ ‘சர்வர் சுந்தரம்’

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *