அந்த வகையில், ஜன.10-ஆம் தேதி பயணம் செய்வோா் (வியாழக்கிழமை) செப்.12-ஆம் தேதியும்,
ஜன.11-ஆம் தேதி பயணம் செய்வோா் (வெள்ளிக்கிழமை) செப்.13-ஆம் தேதியும்,
ஜன.12-ஆம் தேதி பயணம் செய்வோா் (சனிக்கிழமை) செப்.14-ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.
பொங்கல் பண்டிகைக்கு செல்வோா் ரயில் நிலைய முன்பதிவு மையங்களிலும், ஐ.ஆா்.சி.டி.சி இணையதளம் வாயிலாகவும் காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.