பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கு வைப்புத் தொகையா? – அரசின் பரிந்துரைகளுக்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு | DMK alliance parties oppose government recommendations

Spread the love

சென்னை: ‘பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டங்​கள், ரோடு ஷோக்​களுக்கு வைப்​புத்தொகை நிர்​ண​யிப்​ப​தைத் தவிர்க்க வேண்​டும்’ என்று திமுககூட்​டணி கட்​சிகள் வலி​யுறுத்​தி​யுள்​ளன.

தமிழகத்​தில் பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டங்​கள், ரோடு ஷோக்​கள் நடத்​து​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை வகுப்​பது தொடர்​பான அனைத்​துக் கட்​சிக்​ கூட்​டம் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. கூட்ட முடி​வில், அரசி​யல் கட்​சிகளின் பிர​தி​நி​தி​கள் கூறிய​தாவது:

ஆர்​.எஸ்​.​பாரதி (தி​முக): ஆயுதங்​கள் இல்​லாமல் அமை​தி​யாக கூடும் உரிமை அனை​வருக்​கும் உள்​ளது. ரோடு ஷோ நிகழ்​வு​கள், பிரச்​சா​ரக் கூட்​டங்​களுக்கு அனு​மதி வழங்​கு​வது தொடர்​பாக எந்த கட்​டுப்​பாடு​கள் விதித்​தா​லும் அடிப்​படை உரிமை​களை மீறாமல் இருக்க வேண்​டும். வழி​காட்டு​தல்​கள் வகுக்​கப்​பட்ட பின், ஏதேனும் மாற்​றம் இருந்​தால் திருத்​தப்​படும்.

டி.ஜெயக்​கு​மார் (அதி​முக): அரசின் பரிந்துரைகள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். கூட்​டம், ஆர்ப்​பாட்டம், நிகழ்ச்சி நடக்​கும்

போது 5 ஆயிரம் முதல் 1 லட்​சம்வரை கூடு​வார்​கள். அதை கண்​காணிக்க தாலுகா அளவில், மாவட்ட அளவில் ஒரு கமிட்டி போடப்​பட்டு, கண்​காணிப்​பது முக்​கி​யம். பொதுக்​கூட்​டம், ஆர்ப்​பாட்​டம் நடத்​து​வது ஜனநாயக உரிமை. அதை தடை செய்​யக்​கூ​டாது.

செல்​வப்பெருந்​தகை (காங்​கிரஸ்): பொதுக்​கூட்​டத்​துக்கு வைப்​புத் தொகை முறையை அகற்ற வேண்​டும். சிறுசிறு இயக்​கங்​கள், கட்​சிகள் போராட்​டங்​கள், ஆர்ப்​பாட்​டங்​கள் நடத்த வேண்​டும் என்​றால் இதனை எப்​படி ஏற்க முடி​யும். பொதுக்​கூட்​டங்​கள், பரப்​புரைகள், ரோடு ஷோக்​கள் நடத்​தும்​போது ஏற்​படக்​கூடிய அசம்​பா​விதங்​களுக்கு அந்​தந்த கட்​சிகள் பொறுப்​பேற்க வேண்​டும்.

கே.​பால​கிருஷ்ணன் (மார்க்​சிஸ்ட்): அரசின் வரைவு அறிக்கை மக்​களுக்கு அரசி​யல் சட்​டம் வழங்​கி​யுள்ள ஜனநாயக உரிமை​களைப் பறிப்​ப​தாக உள்​ளது. உயர் நீதி​மன்​றம் சொல்​லியதற்​காக அரசி​யல் கட்​சிகளிடம் வைப்​புத் தொகை கேட்​பது, வழி​முறை​கள், கட்​டுப்​பாடு​கள் விதிப்​பது எல்​லாம் காலம்​கால​மாக போராடி பெற்​றுள்ள ஜனநாயக உரிமை​களை பறிப்​ப​தாக அமைந்​து​விடும்.

மு.வீர​பாண்​டியன் (இந்​திய கம்​யூனிஸ்ட்): ஒரு கூட்​டத்​தையோ, மாநாட்​டை​யோ நடத்த வேண்​டும் என்​றால் வைப்பு தொகை​யுடன் நடத்த வேண்​டும். ஏதாவது இழப்பு ஏற்​பட்​டால் அதனை அரசி​யல் கட்​சிகள் ஏற்க வேண்​டும் என்​பது நாடாளு​மன்ற ஜனநாயகத்தை இழுத்து மூடக்​கூடிய செய​லாகும்.

சிந்​தனை செல்​வன் (விசிக): 50 ஆயிரம் பேர் கூடி​னால் ரூ.20 லட்​சம் வைப்பு தொகை வைக்க வேண்​டும் என்​பது உள்​ளிட்ட பல கடுமை​யான விதி​முறை​கள் பெரும் அதிர்ச்​சியை தரு​கிறது. ஜனநாயக நடை​முறை​களை தடுக்​கின்ற வகை​யில், காவல்​துறை ஆட்சி என்ற வகை​யில் தடு​மாறி போய்​விடக்​கூ​டாது. தமிழகத்​தில் ரோடு ஷோ முற்​றி​லு​மாக தடை செய்​யப்பட வேண்​டும்.

ஜவாஹிருல்லா (மமக): கரூர் நிகழ்வை வைத்​துக்​கொண்டு ஜனநாயக ரீதி​யாக செயல்​படக்​கூடிய அனைத்து கட்​சிகளுக்​கும் வைப்​புத் தொகையை வசூலிப்​பது சரியல்ல. ரோடு ஷோ முற்​றி​லு​மாக தடை செய்​யப்பட வேண்​டும்

மவுரியா (மநீம): வைப்​புத்தொகை மிக​வும் அதி​க​மாக உள்​ள​தால் சாதாரண கட்​சிகள் கட்​ட​முடி​யாது. எங்​களை பொறுத்​த வரை​யில் கூட்​டத்தை நடத்​தும்​போது அந்த நிகழ்ச்​சி​யில் நடக்​கும் தவறு உள்​ளிட்ட அனைத்​துக்​கும் அந்​தக் கட்​சியே தார்​மீகப் பொறுப்​பேற்க வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்.

மேலும், தி.வேல்​முரு​கன் (தவாக), அபுபக்​கர் (ஐயுஎம்​எல்) உள்​ளிட்ட பல்​வேறு கட்​சிகளின் தலை​வர்​களும் இதே​போன்ற கருத்​துகளையே வலியுறுத்​தினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *