பொதுத் துறை அறிவிப்புகளை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்: அலுவலர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல் | cm stalin advised officers to implemen announcements in swift phase

Spread the love

சென்னை: பொதுத் துறை, சுற்​றுச்​சூழல் மற்​றும் வனத்​துறை அறி​விப்​பு​கள் அனைத்​தை​யும் துரித​மாக முடித்​து, மக்​களின் பயன்​பாட்​டுக்கு விரை​வில் கொண்​டுவர வேண்​டும் என்று அதி​காரி​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

தலை​மைச்​செயல​கத்​தில் முதல்​வர் தலை​மை​யில் நேற்​று, பொது மற்​றும் மறு​வாழ்​வுத் துறை, சுற்​றுச்​சூழல், காலநிலை மாற்​றம் மற்​றும் வனத்​துறை ஆகியவற்றின் செயல்​பாடு​கள் குறித்​தும், வெளி​யிடப்​பட்ட அறி​விப்​பு​களின் தற்​போதைய நிலை குறித்​தும் ஆய்​வுக் கூட்​டம் நடை​பெற்​றது.

பொது மற்​றும் மறு​வாழ்​வுத்​துறை ஆய்​வுக் கூட்​டத்​திலஅயல்​நாடு​களில், வெளி​மாநிலங்​களில் பணிக்குச் சென்று அங்கு எதிர்​பா​ராத​வித​மாக இறக்​கும் தமிழர்​களின் குடும்​பத்​துக்கு மாத ஓய்​வூ​தி​யம் வழங்​கும் திட்​டம் உள்ளிட்ட பல்​வேறு அறி​விப்​பு​களின் தற்​போதைய நிலை குறித்து முதல்​வர் ஸ்டா​லின் கேட்​டறிந்​தார்.

மேலும் 2021-22 முதல் 2025-26 வரை பொது மற்​றும் மறு​வாழ்​வுத்துறை​யால் அறிவிக்​கப்​பட்ட 90 அறி​விப்​பு​களில், 68 அறி​விப்​புகள் முழு​மை​யாக நிறைவேற்​றப்பட்​டுள்ள நிலை​யில், முடிவுறும் தரு​வா​யில் உள்ள ஏனைய அறி​விப்​பு​கள் தொடர்​பான பணி களை விரைந்து நிறைவேற்ற முதல்​வர் அறி​வுறுத்​தி​னார்.

தொடர்ந்து சுற்​றுச்​சூழல், வனத்​துறை குறித்த ஆய்​வின்​போது, முதல்​வரின் பசுமை புத்​தாய்வு திட்​டம், பசுமை தமிழ்​நாடு இயக்​கம், வனவிலங்​கு​களுக்கான அவசர சிகிச்சை மற்​றும் மறு​வாழ்வு தேவை​களுக்​கென 3 உயர் வனவிலங்கு சிகிச்சை மற்​றும் மறு​வாழ்வு மையங்​கள் கோயம்​புத்​தூர், திருநெல்​வேலி மற்​றும் திருச்​சியில் அமைப்​பது குறித்​தும் சென்​னைக்கு அரு​கில் தாவர​வியல் பூங்கா அமைப்​பது குறித்​தும், மரக்​காணத்​தில் பன்​னாட்​டுப் பறவை​கள் மையம், போன்ற பல்​வேறு அறி​விப்பு​களின் தற்​போதைய நிலை குறித்து முதல்​வர் ஸ்டாலின் கேட்​டறிந்தார்.

இந்த இரு துறை​களின் சார்​பில் வெளி​யிடப்​பட்​டுள்ள அறி​விப்​பு​கள் அனைத்​தை​யும் துரித​மாக முடித்​து, மக்​களின் பயன்​பாட்​டுக்கு விரை​வில் கொண்டு வர வேண்​டும் என்று முதல்​வர் அறி​வுறுத்​தி​னார்.

இக்​கூட்​டத்​தில் துணை முதல்​வர் உதயநிதி, அமைச்​சர்கள் தங்​கம் தென்​னரசு, ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன், தலை​மைச்​செயலர் நா.​முரு​கானந்​தம் உள்ளிட்டோர் பங்​கேற்​றனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *