இந்த கண்காட்சியில் பிரதமர் மோடிக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினார். கண்காட்சியில் தயாரிப்புகளைக் காட்சிக்கு வைத்துள்ள தொழில் முனைவோர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, ஜிஎஸ்டி கட்டமைப்பு சீர்திருத்தங்களால் இந்தியாவின் வளர்ச்சிக்குப் புதிய சிறகுகரள வழங்கும், மக்களுக்கு அதிக சேமிப்புக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
சிப் முதல் கப்பல் வரை அனைத்து பொருள்களையும் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம். இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்போன்களில் 55 சதவீதம் உத்தரப் பிரதேசத்தில் தயாரிக்கப்படுகிறது. செமி கண்டக்டர் துறையிலும் இந்தியா வலிமையடைந்து வருகிறது. மேலும் ரஷியாவுடன் இணைந்து ஏகே 203 ரக துப்பாக்கிகளைத் தயாரிக்கும் ஆலை உ.பி.யில் நிறுவப்படும்.