A General:-
திரைப்படங்களில், ஒரு நாட்டின் அரசர் எதிரி நாட்டு அரசரை சந்திக்கும் காட்சிகளை காட்டியிருப்பார்கள். அந்த சமயத்தில் தன் எதிரி நாட்டு அரசரை வீழ்த்தி விட்டால் எளிதில் வெற்றி பெற்றிருக்கலாம் என்கிற யோசனை சிலருக்கு தோன்றும். ஆனால் வரலாற்றில் இவ்வாறு எந்த அரசரும் செய்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் அரசரை இழந்த நாட்டின் அதிகாரம் அனைத்தும் அந்நாட்டின் தளபதிக்கு சென்று விடும். இது எதிரிகளுக்கு மிகவும் ஆபத்தாக முடிந்து விடும். வெவ்வேறு இடங்களில் போரிட்டுக் கொண்டிருக்கும் அந்நாட்டின் தளபதிகள் ஒன்று சேர்ந்து போர் தொடுப்பார்கள்.

இழந்த அரசர் மீது அதிருப்தியில் இருந்த அண்டை நாட்டு சிற்றரசர்கள் தளபதியோடு சேர்ந்து போரிடுவார்கள். ஒருமுனைப் போட்டி பன்முனை ஆவதை யாரும் விரும்ப மாட்டார்கள். தற்போது, இவ்வகையான போர்கள் நடப்பதில்லை.
இன்றைய போர்கள் மன ரீதியாக நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கிறது. தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கிறது. இன்றைய தளபதிகள் தீய எதிரிகளோடு சண்டையிடுவதை விடுத்து தீய சிந்தனைகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் தளபதிகளாக திகழ்கிறார்கள். மக்களுக்கு விழிப்புணர்வு அளித்து வழிநடத்துகிறார்கள்.
தினசரி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். இவ்வாறு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் தலைவர்களுக்கு, சிலர் தவறான பிம்பத்தை ஏற்படுத்த நினைக்கின்றனர்.