விமான நிலையத்தின் சுமார் 36 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இது உத்தரஆந்திர பிராந்தியத்தின் இணைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் போது, 2026 ஜூன் மாதத்திற்குள் விமான நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார்.
கடந்த மாதத்தில் மூன்று முறை விமான நிலைய பணிகளை ஆய்வு மேற்கொண்ட சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் கே.ராம்மோகன், இது தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஒரு மதிப்புமிக்க மகுடம் என்றார்.