போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பணப்பலன்: பொங்கலுக்குள் வழங்க அமைச்சர் உறுதி | minister assures cash benefits to transport corporation retired workers

1380248
Spread the love

சென்னை: போக்குவரத்துத் துறை அமைச்​சரின் உறு​தி​மொழியை ஏற்​று, போக்​கு​வரத்து ஊழியர்​களின் 62 நாள் காத்​திருப்பு போராட்​டம் வாபஸ் பெறப்​பட்​டது.

போக்​கு​வரத்​துக் கழகங்களில் ஓய்வு பெற்​றவர்​களுக்கு பணப்​பலன் வழங்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்து ஊழியர் சம்​மேளனம், ஓய்வு பெற்​றோர் நல அமைப்பு ஆகியன சார்​பில் ஆக.18-ம் தேதி முதல் தமிழ கத்​தின் 22 மையங்​களில் தொடர் காத்​திருப்பு போராட்​டம் நடை​பெற்​று வந்தது.

இந்​நிலை​யில், இதுதொடர்​பாக தலை​மைச் செயல​கத்​தில் போக்​கு​வரத்​துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்​கர் நேற்று முன்​தினம், சிஐடியு நிர்​வாகிகள் அ.சவுந்​தர​ராசன், கே.ஆறு​முக ந​யி​னார், த​யானந்தம், கே.அன்​பழகன், குணசேகரன், எஸ்​.நட​ராஜனுடன் பேச்​சு​வார்த்தை நடத்​தினார்.

இதில், ஓய்வுபெற்​றோரின் 17 மாத ஓய்​வு​காலப் பலன்​கள் 2 தவணை​களில் பொங்​கலுக்கு முன்பு வழங்​கப்​படும். 15-வது ஊதிய ஒப்​பந்த நிலு​வைத் தொகையின் முதல் தவணை விரை​வில் வழங்​கப்​படும் என்பன உள்​ளிட்ட வாக்​குறு​தி​களை அமைச்​சர் அளித்​தார். இதையடுத்து 62 நாட்​களாக நடை​பெற்ற போராட்​டம் நேற்​றுடன் முடிவுக்கு வந்​தது.

இதுதொடர்​பாக அ.சவுந்​தர​ராசன் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “மக்​கள் பாதிக்​கப்​படக் கூடாது என்ற பொறுப்​புணர்ச்​சி​யோடு தொழிற்​சங்​கங்​கள் அரசுக்கு காலஅவ​காசம் தரு​கிறோம். போராட்​டத்​தில் இதர சங்​கங்கள் பங்​கேற்​காதது வருத்​தமளிக்​கிறது. அரசி​யல், நிர்ப்​பந்​தம், ஆதா​யம் காரண​மாகக் கூட வராமல் இருந்​திருக்​கலாம். ஆனால், மனப்​பூர்​வ​மாக ஆதரவு தெரி​வித்​தார்​கள்” என்​றார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *