போக்குவரத்து கழக இயக்குநராக சிறப்பு செயலர் கார்மேகம் நியமனம் | Change of Directors of Transport Corporations – Full Details

1341261.jpg
Spread the love

சென்னை: போக்குவரத்து கழகங்களின் இயக்குநராக துறையின் சிறப்பு செயலர் எஸ்.கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராக ஸ்வரண் சிங் ஐஏஎஸ் கடந்த 2001-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். நிர்வாகத்தை அவர் சிறப்பாக நடத்தியதால், போக்குவரத்து கழகங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரியை மட்டுமே பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என அரசு சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராக ஆல்பி ஜான் வர்கீஸ் ஐஏஎஸ் கடந்த 2023-ம் ஆண்டு பொறுப்பேற்றார்.

இதேபோல, மற்ற போக்குவரத்து கழகங்களின் தலைவராகவும் ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, போக்குவரத்து துறை சிறப்பு செயலராக பொறுப்பேற்ற ஆர்.லில்லி, சேலம், மதுரை திருநெல்வேலி போக்குவரத்து கழகங்களின் தலைவர் மற்றும் இயக்குநராகவும், சென்னை மாநகர போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், கோவை, கும்பகோணம் போக்குவரத்து கழகங்கள், பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு ஆகியவற்றின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.

லில்லி கடந்த மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், போக்குவரத்து சிறப்பு செயலராக எஸ்.கார்மேகம் பொறுப்பேற்றார். இந்த நிலையில், போக்குவரத்து கழகங்களின் தலைவர் உட்பட லில்லி வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலும் கார்மேகத்தை நியமித்து துறை செயலர் பணீந்திர ரெட்டி அரசாணை பிறப்பித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *