போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடன் மே 29-ல் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை | Wage Hike Talks with Transport Unions on May 29th

1362894
Spread the love

போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய பேச்சுவார்த்தை மே 29ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஊதிய உயர்வு ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போடப்பட்டு வந்தது. அந்த வகையில் 14-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் இறுதி செய்யப்பட்டது. அப்போது பேச்சு வார்த்தைக்கான அவகாசமும், 4 ஆண்டுக ளாக அதிகரிக்கப் பட்டது. அந்த வகையில் 14வது ஊதிய ஒப்பந்தம் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் காலாவதியானது. இதையடுத்து ஓராண்டு தாமதமாக 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை, சென்னை, குரோம்பேட்டை, மாநகர போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் கடந்த ஆண்டு ஆக.27ம் தேதி நடைபெற்றது.

அதன் பின்னர் ஒருகட்ட பேச்சு வார்த்தை மட்டுமே நடைபெற்ற நிலையில், விரைந்து ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையில் பங்கேற்க வருமாறு பேச்சு வார்த்தைக் குழு தரப்பில் தொழிற்சங்கங்க ளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மே 29ம் தேதி காலை 11 மணிக்கு குரோம்பேட்டையில் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *