போக்சோ குற்றங்கள் தொடர்பாக 4 நாள்களில் புதிய வரைவு அறிக்கை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:
தேர்வுகளை எதிர்கொள்ள ஆசிரியர்கள் தயார் நிலையில் உள்ளனர். போக்சோ தொடர்பாகவும் மாணவர்கள் பிரச்னை குறித்தும் கூட்டத்தில் பேசி உள்ளோம்.