தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதி கட்சி சார்பாக இயக்குநர் சுந்தர் சி போட்டியிடுகிறார்.
இந்நிலையில், “தேர்தலில் வெற்றி பெற்றால் மதுரை மத்தியத் தொகுதியில் இறைச்சி விற்பனையைத் தடை செய்து கோவில் நகரத்தின் புனிதத்தைப் பாதுகாப்பேன்’ என்று சுந்தர் சி பேசியதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

தற்போது சுந்தர் சி இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “தேர்தலில் நான் வெற்றி பெற்றால் மதுரை மத்திய தொகுதியில் இறைச்சிக் கடைகளை மூடுவேன் என நான் சொன்னதாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது.
மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்கத் தெரிந்தவன் நான் என்பது மக்களுக்கே தெரியும்.
போட்டியை நேரடியாக எதிர்கொள்ள தைரியம் இன்றி குறுக்கு வழியை நாடுவோரின் இதுபோன்ற கீழ்தரமான நடவடிக்ககைகளுக்கு நமது ஒற்றுமை மற்றும் வெற்றியால் பதிலடி தருவோம்” என்று தெரிவித்திருக்கிறார்.