போதைப்பொருள் விற்பனையில் ஈட்டிய பணம் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது? -அண்ணாமலை குற்றச்சாட்டு

Dinamani2f2024 052fc524fc14 159e 4fbb Aa0f 3c383ca5db982fp 3591118313.jpg
Spread the love

தமிழ்நாடு பாடநூல் கழகம் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குக்கு மறைமுகமாக உதவியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் கழகம் குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது, “போதைப்பொருள் விற்பனை மூலம் ஜாபர் சாதிக்குக்கு கிடைத்த பணத்தை வெள்ளையாக்க தமிழ்நாடு பாடநூல் கழகம் மறைமுகமாக உதவி செய்துள்ளது. இவ்விவகாரத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறை விசாரணையில் அமபலமாகியுள்ளது. இவ்விவகாரம் குறித்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கமளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அண்ணாமலை தெரிவித்திருப்பதாவது, ‘போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை ஜாஃபர் சாதிக் 2022-2023 காலகட்டத்தில், தனக்கு சொந்தமான நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில், ஜாஃபர் சாதிக்கின் அதே நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் ஒப்பந்ததார நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு பொருள்களை வழங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.

மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில், திமுக நிர்வாகியாக இருந்த ஜாஃபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்காக தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மறைமுகமாக உதவி செய்துள்ளதாகவே இதன் மூலம் தெரிய வருகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *