போபாலில் பள்ளிக்கு தெலுங்கில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள பள்ளி ஒன்றுக்கு மிரட்டல் விடுத்து தெலுங்கில் மின்னஞ்சல் வந்ததாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
மின்னஞ்சலில், ஆர்டிஎக்ஸ் மூலம் கல்வி நிறுவனம் தகர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மிரட்டல் வந்தபோது பள்ளியில் மாணவர்கள் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக வளாகத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா?- சீமான்
பின்னர் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர் மற்றும் மோப்ப நாய் படையினர் வரவழைக்கப்பட்டு பள்ளி வளாகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து மின்னஞ்சல் அனுப்பியவரைக் கண்டறியும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.