போபாலில் யாசகம் எடுத்து ராஜவாழ்க்கை வாழ்ந்த யாசகர் | 3 bungalows, 3 auto-rickshaws, a car, and a driver: A beggar in Indore lived a luxurious life by begging.

Spread the love

வியாபாரிகளுக்கு கந்து வட்டிக்கு பணம்

மங்கிலால், சரபா பஜாரில் உள்ள சிறு நகை வணிகர்களுக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து அதிலும் கணிசமாக சம்பாதித்து வந்துள்ளார். அவர் கடன் கொடுப்பவர்களிடமிருந்து தினசரி அல்லது வாராந்திர வட்டி வசூலித்து வந்துள்ளார். இது குறித்து அதிகாரி தினேஷ் மிஸ்ரா கூறுகையில்,”‘ மங்கிலால் தனக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் அவரிடம் எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற விபரத்தை இன்னும் கணக்கிடவில்லை. அவருடைய வருமானம் மற்றும் அவரது பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் நாங்கள் ஆய்வு செய்கிறோம்,” என்று கூறினார்.

அவரது சொத்துக்களை சரிபார்ப்பதற்காக மங்கிலாலின் வங்கிக் கணக்குகள் மற்றும் பிற பண இருப்புகளின் பட்டியலை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். சொந்தமாக வீடு இருந்தும் PMAY திட்டத்தில் வீடு பெற்றதற்கு பதில் அளிக்க அவர் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்பு ஆஜர்படுத்தப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட திட்ட அதிகாரி ரஜ்னிஷ் சின்ஹா இது குறித்து கூறுகையில், “மங்கிலால் குறிப்பிடத்தக்க அளவு சொந்தமாக சொத்து வைத்திருப்பதை உறுதி செய்து இருக்கிறோம். அவர் கந்துவட்டியிலும் ஈடுபட்டுள்ளார், இது ஒரு குற்றம். யாசகம் பெறுவதை ஊக்குவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.”என்று தெரிவித்தார்.

மங்கிலால் தற்போது அல்வாசா குடியிருப்பில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அவரது சகோதரர்கள் இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்தூரின் தெருக்களில் யாசகம் எடுப்பவர்களை அகற்றுவதற்கான பிரச்சாரம் பிப்ரவரி 2024 இல் தொடங்கியது. இதில் பல்வேறு ஏஜென்சி மூலம் இரண்டு ஆண்டுகளில் 6,500 யாசகர்களை அடையாளம் கண்டு, அவர்களில் 4,500 பேருக்கு அரசு நடத்தும் முயற்சிகள் மூலம் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்ய ஆலோசனை வழங்கியுள்ளனர். 1600 பேர் உஜ்ஜைனில் உள்ள ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *