கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் காலமானாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 88.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் மறைவு செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பிய கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், ஈஸ்டா் திருநாளையொட்டி செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்தில் மக்களைச் சந்தித்து ஆசி வழங்கியிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் அமெரிக்காவிலிருந்து கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவாக தேர்வு செய்யப்பட்ட முதல் திருத்தந்தை போப் பிரான்சிஸ் என்பது குறிப்பிடத்தக்கது