கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், போராடும் இடத்திற்கே சென்று அவர்களை முதல்வர் மமதா இன்று சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, நான் இங்கு உங்கள் மூத்த சகோதரியாக வந்துள்ளேன், முதல்வராக அல்ல. உங்கள் கோரிக்கைகளை ஆய்வு செய்து யாரேனும் குற்றவாளி எனத் தெரிந்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன். நெருக்கடியைத் தீர்க்க இது எனது கடைசி முயற்சி. போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை பணிக்குத் திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முதல்வர் அங்கிருந்து வெளியேறிய பிறகு, போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள், பேச்சுவார்த்தை நடைபெறும் வரை தங்கள் கோரிக்கைகளில் சமரசம் செய்யத் தயாராக இல்லை என்று தெரிவித்தனர்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா், கடந்த மாதம் 9-ஆம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டாா். கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு, மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இளம் மருத்துவா்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.