இந்தியா – பாகிஸ்தான் உள்பட உலகம் முழுவதும் ஏராளமான போர்களை மத்தியஸ்தம் செய்து தடுத்து நிறுத்தியிருக்கிறேன்.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும். தாய்லாந்து – கம்போடியா, காங்கோ – ருவாண்டா நாடுகளுக்கு இடையேயான போர்களையும், வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் அழுத்தம் கொடுத்து நிறுத்தியிருக்கிறேன்.
கேளுங்கள், நீங்கள் சண்டையிடப் போகிறீர்கள், உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள் சண்டையிட்டுக் கொள்ளுங்கள். இதயத்தை வெளியேற்றிவிட்டு சண்டையிட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்கிறேன். ஆனால், நாங்கள் உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள மாட்டோம் என்று கூறிவிட்டேன். உடனடியாக அனைவரும் போரை நிறுத்தி விட்டார்கள்.
இந்த வகையில் நான் எண்ணற்றப் போர்களை நிறுத்தியிருக்கிறேன். இப்படிப்பார்த்தால் சராசரியாக ஒரு மாதத்துக்கு ஒரு போரை நிறுத்தியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால், உங்களுக்குத் தெரியுமா, இதன் மூலம் பல லட்சக்கணக்கான உயிர்களை நான் காப்பாற்றியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.