கொல்கத்தாவில் போலி ஆவணங்களின் மூலம் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்து நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தின் நராய்ல் மாவட்டத்தைச் சேர்ந்த நபர், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் போலியாகத் தயாரிக்கப்பட்ட இந்திய ஆவணங்களைக் கொண்டு சட்டவிரோதாமக கிடர்பூர் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து குடியேறியுள்ளார்.
மேலும், அவரிடம் இருந்து போலியாக இந்திய முகவரியில் உருவாக்கப்பட்ட ஆதார் அட்டையும், பான் கார்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை! ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு