ஆனால் ராஜாராம் காவல் நிலையத்தில் புகாரளிக்காமல், தன் நண்பர் மகேந்திரன் என்பவரிடம் சொல்லியுள்ளார். அவர்கள் ஆலோசித்து, அந்த பெண் மீண்டும் வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்துள்ளனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே அந்த பெண், கடந்த 17-ம் தேதி மீண்டும் சென்று நகை அடகு வைக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். ராஜாராம் அவரை காத்திருக்க சொல்லிவிட்டு மகேந்திரனை அழைத்துள்ளார். அவர் தன் நண்பர்கள் 3 பேரை அழைத்து கொண்டு கடைக்கு சென்றுள்ளார். அவர்கள் அந்தப் பெண்ணிடம் பணத்தை கேட்டு மிரட்டி தாக்க தொடங்கியுள்ளனர்.
