போலீஸ் ஸ்டேஷனில் பொங்கல் கொண்டாட்டம்: குத்தாட்டம் போட்ட  23 போலீசார் டிரான்ஸ்பர்  – Kumudam

Spread the love

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஜனவரி 15-ம் தேதி பொங்கல் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி முடித்துள்ளனர். அரசியல் கட்சிகள், அமைப்புகள், பள்ளி, கல்லூரி என பொங்கல் விழா களைக்கட்டியது. அந்த வகையில் தமிழகத்தில் சில காவல்நிலையங்களிலும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

அந்த வகையில், தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் காவல் நிலையங்களில் பொங்கல் விழா நடைபெற்றது. குரோம்பேட்டை, பல்லாவரம் காவல் நிலையங்களில் பொங்கல் விழா கொண்டாடிய போது போலீசார் சினிமா பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் பல்லாவரம் காவல் நிலையத்தில் போலீசார் நடனமாடிய வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங் களில் வைரலாக பரவியது. இதையடுத்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், பணியின்போது நடனமாடிய காவலர்களை கட்டுப்படுத்த தவறிய பல்லாவரம் காவல் ஆய்வாளர் பழனிகுமார், குரோம்பேட்டை காவல் ஆய்வாளர்  தயாள் ஆகிய 2 பேரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

பல்லாவரம், குரோம்பேட்டை காவல் நிலையத்தில் நடனமாடிய போலீசாரும், அதனை கைத்தட்டி ரசித்த காவலர்கள் என 23 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து காவ ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *