பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

Dinamani2fimport2f20202f112f122foriginal2fgov Bus.jpg
Spread the love

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில், வரும் திங்கள்கிழமை(19/08/2024) பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 18/08/2024 முதல் 20/08/2024 வரை சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைக்கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 18/08/2024 அன்று 130 பேருந்துகளும் 19/08/2024 அன்று 250 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து 18/08/2024 அன்று 30 பேருந்துகளும், 19/08/2024 அன்று மாதவரத்திலிருந்து தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் 40 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.

மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 19/08/2024 அன்று 265 பேருந்துகள் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 50 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 19/08/2024 அன்று இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ஒசூர் ஆகிய இடங்களலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *