ஜார்க்கண்ட் மாநிலம், ஹசரிபாக் பகுதியில் பெண் ஒருவர் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அப்பெண், உடல் நலமில்லாத தன்னுடைய மகனைக் காப்பாற்ற சொந்த மகளை நரபலி கொடுத்துள்ளார். ரேஷ்மி தேவி என்ற அந்தப் பெண்ணுக்கு (55) 12 வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் ரேஷ்மியின் மகனுக்கு சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ரேஷ்மி அங்கு பில்லி, சூனியம் செய்யக்கூடிய மந்திரவாதி சாந்தி தேவி என்பவரைச் சென்று பார்த்தார். உடனே சாந்தி தேவி, `குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் தீரவும், மகனின் உடல்நலம் சரியாகவும் உனது 12 வயது மகளை நரபலி கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், `உனது 12 வயது மகளை தெய்வம் ஆட்கொண்டு இருப்பதால், அவரை பலி கொடுத்தால் உனது மகனைக் காப்பாற்ற முடியும். அதோடு உனது மகனைக் காப்பாற்ற கன்னிப்பெண்ணை பலியிடுவது அவசியம்’ என்றும் தெரிவித்தார்.
ரேஷ்மி தேவியும் அதற்கு சம்மதித்தார். இதையடுத்து கடந்த 24ம் தேதி, 12 வயது பெண்ணை ரேஷ்மி தனது காதலன் பீம்ராம் துணையோடு கொலைசெய்தார். ரேஷ்மி தனது மகளின் கால்களைப் பிடித்துக்கொண்டார். பீம்ராம் கழுத்தை நெரித்துக் கொலைசெய்தார்.
அதன் பிறகு அருகில் நின்ற சாந்தி தேவி கொலைசெய்யப்பட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மரக்குச்சியைச் செலுத்தினார். அதோடு சடங்குகளுக்காக ரத்தம் எடுக்க 12 வயது பெண்ணின் தலையில் பீம்ராம் தாக்கினார். அதன் பிறகு சிறுமியின் உடலை பள்ளிக்கு அருகில் உள்ள மூங்கில் தோட்டத்தில் புதைத்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து ரேஷ்மி தனது மகளைக் காணவில்லை என்று கூறி, போலீஸில் புகார் கொடுத்தார்.