மகளிருக்கு ரூ.5000: “ஆதரவு முதல் எதிர்ப்பு வரை”`- ஊடகவியலாளர்கள் சொல்வது என்ன? | Journalists’ opinion on the magalir urimai thogai announced by CM Stalin: Rs. 5000

Spread the love

தி.மு.க அரசு ரூ1,000 கொடுத்து வந்த நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2,000 ரூபாய் தருவோம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால், ஸ்டாலின் மூன்று மாத நிலுவைத் தொகை ரூ3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகை ரூ2,000 எனச் சேர்த்து 5,000 ரூபாயை ஒரே நேரத்தில் வழங்கியது, அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைப் பதற வைத்துள்ளது. இந்த இலவம் வழங்கும் போட்டியில் ஸ்டாலின் தற்போதைய நிலையில் வெற்றி பெற்றுவிட்டார்.

பிகாரில் நிதிஷ் குமார், ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் அந்தந்த அரசுகள் இத்தகைய திட்டங்கள் மூலம் பலன் அடைந்திருக்கின்றன. தமிழகத்திலும் இந்தத் திட்டம் தி.மு.க-வுக்குத் தேர்தல் களத்தில் மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரும். மகளிர் உரிமைத் தொகை பெறும் 1 கோடியே 31 லட்சம் பெண்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் ஸ்டாலினின் பக்கம் திரும்புவார்கள்.

இலவசங்கள் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என்று நினைப்பவர்கள் நாம் தமிழர் கட்சியின் சீமானை நோக்கி நகர வாய்ப்புள்ளது. ஏனென்றால், மற்ற அனைத்துக் கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் இலவசங்களை ஆதரிப்பவை தான்.

மத்திய மோடி அரசு இந்தத் திட்டத்தை முடக்கப் பார்க்கிறது என்ற முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டு ஒரு தெளிவான அரசியல் யுக்தி. ‘இவ்வளவு அவசரமாக நான் ஏன் இந்தப் பணத்தைக் கொடுக்கிறேன்’ என்பதை மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவதற்கும், அவர்கள் மத்தியில் ஒரு அனுதாபத்தை உருவாக்குவதற்கும் ஸ்டாலின் இதைப் பயன்படுத்தியுள்ளார்.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *