“மகளிருக்கு ரூ 6,500 கோடியை ஒரே நாளில் கிடைக்க செய்த முதல்வரால், எங்களுக்கு நிதி ஒதுக்க முடியாதா?”/Part time teacher association demand to tamilnadu government

Spread the love

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் அரசுப் பள்ளிகளில் 2012 ஆம் ஆண்டு பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என அப்போதிருந்த அதிமுக அரசிடம் திமுக வலியுறுத்தியது.

மேலும் 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக வாக்குறுதி அளித்தது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றினால் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரமாகி நல் வாழ்க்கையை அமைத்து கொள்ள முடியும்.

2021 ஆகஸ்டு இடைக்கால பட்ஜெட்டை தொடர்ந்து திமுக அரசின் 4 முழு பட்ஜெட்டிலும் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனாலும் அதிலிருந்து, பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிதி ஒதுக்கி பணிநிரந்தரம் செய்ய முன்வரவில்லை.

இனி இடைக்கால பட்ஜெட் மட்டுமே திமுக அரசின் கையில் உள்ளது. இதிலாவது நிதி ஒதுக்கி பணி நிரந்தரம் செய்து காலமுறை சம்பளம் வழங்க அரசு முன்வர வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்கள் தற்காலிகமாக பணிபுரிந்து வருவது வாழ்வாதாரத்தை பாதித்து வருகின்றது.

பள்ளிக் கல்வித்துறை

பள்ளிக் கல்வித்துறை

தற்போதுவரை சம்பளமாக 12 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. பணிநிரந்தரம் செய்தால் அரசின் சலுகைகள், பணப்பலன்கள் அனைத்தும் கிடைத்துவிடும் என்பதை வலியுறுத்தி ஜனவரி 8-ந்தேதியிலிருந்து போராட்டம் நடத்திய நிலையில் சம்பள உயர்வாக ரூ 2,500 வழங்கப்படும் எனவும், மே மாதத்திற்கு கருணைத் தொகை ரூ10 ஆயிரம் வழங்கப்படும் எனவும், தேர்வில் சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தரப்பில் மூன்று அறிவிப்புகளை வெளியிட்டாலும் அதற்கு அரசாணை வெளியிடவில்லை.

அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான தேத அறிவிக்கப்படுவதற்கு முன்பாக இந்த இடைக்கால பட்ஜெட்டில் திமுகவின் தேர்தல் வாக்குறுதி 181-இல் முதல்வர் ஸ்டாலின் சொன்னபடி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தற்போதுள்ள பத்தாயிரத்திற்கும் மேலான பகுதிநேர ஆசிரியர்களை காலமுறை சம்பளத்தில் பணிநிரந்தரம் செய்ய நிதி எவ்வளவு தேவைப்படும் என்பது ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும்.

ரூ 6,500 கோடி நிதியை ஒரே நாளில் மகளிருக்கு கிடைக்க செய்ய ஆணையிட்டு சாத்தியமாக்கிய முதல்வரால் அதுபோல பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தரத்திற்கு நிதி வழங்க முதல்வர் மனது வைத்தால் போதும்” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *