முதல் கட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டவர்களுக்கு இருந்த தகுதிகள் தளர்த்தப்பட்டு அதன் அடிப்படையில் இரண்டாவது கட்டம் மகளிர் உரிமைத்தொகை வழங்கியிருக்கிறோம்.
வசதி படைத்தவர்கள் நீக்கப்பட்டு வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு, தகுதியானவர்களுக்கு நிறைவாக வழங்கியுள்ளோம்.

“கிடைக்காதவர்கள் விண்ணப்பிக்கலாமா?” என்ற கேள்விக்கு, “இதுகுறித்து முதல்வர் முடிவு எடுப்பார்” என்றார்.
நிராகரிக்கப்பட்டவர்கள் குறித்த கேள்விக்கு, “ஆர்.டி.ஓ-விடம் மேல்முறையீடு செய்யலாம். அதன்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அது குறித்த விளக்கங்கள் அவர்கள் தெரிவிப்பார்கள்.
எங்களைப் பொறுத்தளவில் பொதுமக்கள் சொல்லக்கூடிய குறைகளைக் கனிவோடு கேட்கக்கூடிய இடத்தில் இருக்கிறோம். குறைகளை நிவர்த்தி செய்வதற்கு என்ன வழியோ அதனைச் செய்கிறோம்” எனக் கூறினார்.