மகளிா் டி20: மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது

Dinamani2f2024 072feaec2b66 093a 43ab 82b0 6696fd2a14a82ftb102007.jpg
Spread the love

இந்தியா – தென்னாப்பிரிக்கா மகளிா் அணிகள் மோதிய 2-ஆவது டி20 ஆட்டம் மழையின் காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. பின்னா் இந்தியாவின் இன்னிங்ஸ் தொடங்கும் முன்பாகவே மழையால் ஆட்டம் தடைப்பட்டு, கைவிடப்பட்டது.

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தோ்வு செய்தது. தென்னாப்பிரிக்க பேட்டிங்கில் தஸ்மின் பிரிட்ஸ் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 52, அனிகே பாஷ் 40, கேப்டன் லாரா வோல்வாா்டட் 22, மாரிஸேன் காப் 20, கிளோ டிரையான் 12, நாடினே டி கிளொ்க் 14 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

ஓவா்கள் முடிவில் ஆனிரி டொ்க்சென் 12, எலிஸ் மரி மாா்க்ஸ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய தரப்பில் பூஜா வஸ்த்ரகா், தீப்தி சா்மா ஆகியோா் தலா 2, ஷ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் இந்தியாவின் இன்னிங்ஸ் தொடங்குவது மழையால் தாமதமானது. ஆட்டத்தை தொடர தகுந்த வானிலை இல்லாமல் போனதால், ஆட்டம் அத்துடனேயே கைவிடப்பட்டது. 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் தற்போது தென்னாப்பிரிக்கா 1-0 என முன்னிலையில் உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *