மகளைக் கொல்ல முயன்ற தாய்… கொலையாளி துணையுடன் தாயைக் கொன்ற மகள்!

Dinamani2fimport2f20212f42f92foriginal2fsuside1.gif
Spread the love

உத்தரப் பிரதேசத்தில் ஆள் வைத்து மகளைக் கொலை செய்ய முயற்சித்த தாயை, கொலையாளி துணையுடன் மகளே கொலை செய்த சம்பவம் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அல்கா (36) என்ற பெண்மனி உ.பி. எட்டா நகரிலுள்ள அல்லாபூரில் வசித்து வந்தார். இவருடைய மகள் எட்டு மாதங்களுக்கு முன்பு தனது காதலன் அகிலேஷ் என்பவருடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

அப்போது காவல் நிலையத்தில் தனது மகளை மீட்டுத் தருமாறு வழக்குத் தொடுத்ததால் அகிலேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையிலிருந்து இரு மாதங்களுக்கு முன்பு அகிலேஷ் விடுதலை செய்யப்பட்டார். எனவே, தனது மகளை ஃபரூக்காபாத் நகரிலுள்ள தனது தாயார் வீட்டுக்கு அல்கா அனுப்பி வைத்தார்.

அங்கு வைத்து, சுபாஷ் (38) என்ற நபருடன் அல்காவின் மகள் காதலில் விழுந்துள்ளார். சுபாஷ் பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளிவந்தவர்.

இதையும் படிக்க: 11 ஆண்டுகளுக்குப் பிறகு கொலைக் குற்றவாளி ஜார்க்கண்ட் வனப்பகுதியில் இருந்து கைது

இந்த நிலையில், தனது மகளின் நடத்தை சரியில்லாமல் இருப்பதாகக் கோபமடைந்த அல்கா, மகளைக் கொலை செய்ய ரூ. 50,000 பணம் தருவதாகக் கூறி சுபாஷை ஏற்பாடு செய்கிறார். சுபாஷ் தனது மகளின் மற்றொரு காதலன் என்பது அல்காவுக்கு தெரியவில்லை.

இதனைத் தொடர்ந்து, கடந்த செப். 27 அன்று அல்காவை தனது தாயார் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு அழைத்து வந்த அல்கா சுபாஷிடம் கொலை செய்வதற்காக ஒப்படைத்துள்ளார்.

சுபாஷ், அல்காவின் மகளை ஆக்ராவிலுள்ள அவளது தோழியின் வீட்டில் தங்க வைத்துவிட்டு, கொலை செய்ததாகக் கூறி போலியான புகைப்படங்களை அல்காவுக்கு அனுப்பியுள்ளார். அல்கா இதனை நம்பவில்லை என்பதால் அவரை ஆக்ராவுக்கு வருமாறு சுபாஷ் அழைத்துள்ளார்.

இதையும் படிக்க: பெண் மருத்துவா் கொலைச் சம்பவம்: விரைவான நீதி கேட்டு சிபிஐ அலுவலகத்தை நோக்கி பேரணி

தன்னுடைய தாயைக் கொலை செய்தால் சுபாஷை திருமணம் செய்து கொள்வதாக மகள் கூறியதால் நேரில் வந்த அல்காவை கடந்த அக். 6 அன்று இருவரும் இணைந்து கழுத்தை நெறித்துக் கொன்று அவரது உடலை வயலில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தக் கொலை தொடர்பாக இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *