மகா(ன்)பிரசாதம்: இந்துக்களின் அடையாளம்! – Kumudam

Spread the love

மகா(ன்)பிரசாதம்: இந்துக்களின் அடையாளம்!

ஜெயாப்ரியன்

“சுவாமி, நாம எல்லாம் இந்துக்கள் இந்துக்கள்னு சொல்லிக்கொள்றோமே, இந்துக்களுக்குன்னு தனிப்பட்ட அடையாளம் ஏதாவது இருக்கிறதா?’’ இப்படி ஒரு கேள்வியை மகாபெரியவரிடம் கேட்டார் ஒரு வி.ஐ.பி. அவருக்கு மகான் சொன்ன பதில் என்ன தெரியுமா?

 “ஒவ்வொரு மதத்துக்காராளுக்கும் ஒவ்வொரு அடையாளம் இருக்கறதால, நமக்குன்னு தனியா எந்த அடையாளமும் இல்லையேங்கற ஆதங்கத்துல இப்படிக் கேட்கறே!

உனக்கு ஒண்ணு தெரியுமோ, மற்ற மதத்துல எல்லாம் எல்லாருக்கும் ஒரே ரூல்ஸ்தான். அதைத்தான் ஃபாலோ பண்ணணும். அது கஷ்டம், இது முடியாதுன்னெல்லாம் சொல்லக்கூடாது. ஸ்டிரிக்ட்னா ஸ்ட்ரிக்ட் தான்.

ஆனா, ஹிந்துமதத்தை எடுத்துண்டா, உனக்கு எது சுளுவோ அதை நீ ஃபாலோ பண்ணலாம். அவனுக்கு எது ஈஸியோ அதை அவன் கடைபிடிச்சுக்கலாம்.

ஒரு விரதமா இருந்தாலும், பூஜையா இருந்தாலும் அவா அவா வழக்கப்படி கடைபிடிச்சுக்கலாம். முழுசா உபவாசம் இருக்க முடியலையா பரவாயில்லை. தொடர்ந்து செய்ய முடியாதபடிக்கு ஏதாவது தடை வருதா? அதுக்கும் இங்கே ஃப்ளெக்ஸிபிள் உண்டு.

ஏன்னா, ஹிந்து மதம் ஒரே ஒரு ஆசார்யாரால உருவாக்கப்படலை. சொல்லப்போனா, இதுக்கு ஆதியும் கிடையாது, அந்தமும் இல்லை. அதாவது, காலாகாலத்துல வரக்கூடிய மாற்றங்களையும் கிரஹிச்சு அதுக்கு ஏத்த மாதிரி தர்ம நியாயங்களை அனுசரிக்கக் கூடியது.

இதுல மாறாம இருக்கக் கூடியதுன்னா, தர்மத்தையும், ஆசாரத்தையும் மீறாம இருக்கறதுதான். இதுலயும் மனோதர்மம் ரொம்ப முக்கியம்.

சரி இப்போ நீ கேட்ட விஷயத்துக்கு வரேன்.

கிறிஸ்துவா சிலுவை அணிஞ்சுக்கற மாதிரி, முஸல்மான்கள் தொப்பி வைச்சுக்கற மாதிரி இந்துக்களுக்கு ஏதாவது அடையாளம் இருக்கானு கேட்கறே…அப்படி ஒண்ணு கிடையாதுதான். ஆனா ஒரு விஷயத்தைச் சொல்லலாம்.

 ‘ஆ ஸேது ஹிமாசலம் கர்ணபூஷணம்’ தான் ஹிந்துக்களோட அடையாளம். அதாவது ராமேஸ்வரத்துல இருந்து இமாசலம் வரைக்கும் எங்கே இருக்கற ஹிந்துவும், ஆண் பெண் பேதமில்லாம எல்லாரும் காதுகுத்திண்டு இருப்பா.

அதனால, அதை அடையாளமா சொல்லிக்கலாமே தவிர, பர்ட்டிகுலரா எதுவும் கிடையாது!”

(பிரசாதம் மணக்கும்)

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *