விஜய் சேதுபதி நடிப்பில் 50-வது திரைப்படமான மகாராஜா கடந்த வாரம் திரைக்கு வந்தது. இந்த படம் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.
மகாராஜா
இந்த படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுமார் 8 வருட இடைவெளிக்குப் பிறகு இயக்கி இருந்தார்.
விமர்சன ரீதியாக இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் அதே அளவிலான தாக்கத்தை இப்படம் பாக்ஸ் ஆபிசில் ஏற்படுத்தவில்லை என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்து வருத்தம் அடைந்துள்ளனர்.
படம் வசூல்
மகாராஜா படம் வசூலை வாரி குவிக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் முதல் 3 நாளில் தமிழகத்தில் இந்த படம் ரூ.15 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் சேதுபதியின் முந்தைய படங்களை ஒப்பிடுகையில் இந்த வசூல் குறைவு என்கின்றனர்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் ரோகினி திரையரங்கின் உரிமையாளர் கூறும்போது, வளர்ந்து வரும் ஒரு நடிகரின் படத்துக்கு கிடைத்த ஓபனிங் கூட நல்ல விமர்சனம் பெற்றிருக்கும் இந்த படத்துக்கு கிடைக்கவில்லை என்று மறைமுகமாக தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்து இருந்தார்.
விஜய் சேதுபதியின் முந்தைய படங்கள் பெரிய அளவில் ஓடாததால் அவர் மீதான நம்பிக்கை ரசிகர்களுக்கு குறைந்துஇருப்பதாக கூறப்படுகிறது. மகாராஜா படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவில் இல்லாததல் விஜய்சேதுபதி அப்செட் ஆக இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படியுங்கள்: