மகாயுதி கூட்டணி இமாலய வெற்றி
மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் மகாயுதி கூட்டணி சார்பில் ஆளும் சிவசேனை கட்சி 81 இடங்களிலும், பாஜக 144 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) 59 இடங்களிலும் போட்டியிட்டனர்.
இதில், பாஜக மட்டுமே 133 இடங்களில் வெற்றிபெற்று, மாநிலத்தின் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது. சிவசேனை 57 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) 41 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்துவந்த மகாயுதி கூட்டணி கட்சிகள் மொத்தமாக 235 தொகுதிகளில் வெற்றி பெற்று இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.
‘மகாயுதி’ கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான நிலை உருவாகியுள்ளதை அடுத்து கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.