மகாராஷ்டிரத்தில் ஊழல் அரசை அகற்றுவதே எங்கள் நோக்கம்: கே.சி.வேணுகோபால்

Dinamani2f2024 072fb7fad13c C36e 468c Aace 4c021f22e9192fcongress.jpg
Spread the love

மகாராஷ்டிரத்தில் ஊழல் அரசை அகற்றுவதே எங்கள் நோக்கம் என்றும் கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு இந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2024 இல் முடிவடைகிறது. இருப்பினும், இந்திய தேர்தல் ஆணையம் தேதிகளை இன்னும் அறிவிக்கவில்லை. இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்தல் முன்னேற்பாடு குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் கட்சியை வலுப்படுத்தவும் விவாதம் நடந்தது. மகாராஷ்டிரத்தில் இருந்து இந்த ஊழல் அரசை அகற்றுவதே எங்கள் நோக்கம். இந்த அரசு இயற்கையான அரசு அல்ல.

மாநிலத்தில் மகா விகாஸ் அகாதி ஆட்சியமைக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த யோசனைகள், திட்டமிடல் உள்ளது, ஆனால் தேர்தலில் நாங்கள் ஒன்றாகப் போராடுவோம். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மகாராஷ்டிர மக்கள் எங்கள் கூட்டணிக்கு ஆதரவளிப்பார்கள். இந்த ஊழல் அரசை தோற்கடிக்க நாங்கள் மிகவும் உறுதியுடன் இருக்கிறோம். அது வரும் நாட்களில் நடக்கும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, நாட்டில் தெளிவான செய்தி உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *