மகாராஷ்டிரத்தில் எங்களுக்கே வெற்றி: பாஜகவின் மன உறுதிக்கான காரணங்கள்!

Dinamani2f2024 11 042fk7cmhvxb2f202411043254632.jpg
Spread the love

மகாராஷ்டிர பேரவைக்கு நாளை நடைபெறவிருக்கும் தேர்தல் களத்தில் ஆறு கட்சிகள் இருந்தபோதும், பாஜக என்னவோ, மஹாயுதி இமாலய வெற்றி பெற்று சாதனை படைக்கும் என உறுதியாக நம்பி வருகிறது.

பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணிக் கட்சிகள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெறும். மகாராஷ்டிர மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையுடன் 3 இலக்கத்தில் வெற்றியைப் பெற்று ஆட்சியமைக்கும் என்றும், மஹாயுதி கூட்டணி மிக எளிதாக 150 என்ற இலக்கத்தைத் தொட்டுவிடும் எனும் பாஜக மாநில தலைவர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள்.

இதற்கு மிக முக்கியக் காரணங்கள் என்னவென்றால்..

பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் 76 தொகுதிகளில் நேரடியாகக் களம் காண்கின்றன. இதில் கிட்டத்தட்ட 50 தொகுதிகளில் வெற்றி பெற்று விடுவோம் என்று பாஜக கருதுகிறது. மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 102 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் 76 தொகுதிகளில் பாஜகவை எதிர்கொள்கிறது. பாஜகவோ ஒட்டுமொத்தமாக 152 இடங்களில் போட்டியிடுகிறது. அதுமட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் பலவற்றிலும் பாஜக தலைவர்களே போட்டியிடுகிறார்கள்.

மிகக் குறைவான தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதில் 76 தொகுதிகளை பாஜகவுடன் எதிர்கொள்கிறது. ஆனால், பாஜகவின் கதை வேறு. கிட்டத்தட்ட பாதிக்கு பாதி தொகுதிகளில்தான் காங்கிரஸ் கட்சியை எதிர்கொள்கிறது. எனவே, பாஜக அதிகளவில் வெற்றிபெற்றால், தன்னிச்சையாக, காங்கிரஸ் வெற்றி கணிசமாகக் குறைந்துவிடும்.

இப்படியும் இருக்கலாம்..

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு செய்திருக்கும் நலத்திட்டங்களை முன்வைத்து மஹாயுதி தலைவர்கள் மேற்கொண்ட அனல் பறக்கும் தேர்தல் பிரசாரங்கள் நிச்சயம் வாக்காளர்களிடையே எடுபடும் என்று பாஜக கருதுகிறது. பெண் குழந்தைகள் திட்டம் போன்ற சில வாக்குறுதிகள், வாக்களர்களிடையே பெரிய அளவில் மனமாற்றத்தை ஏற்படுத்தும் என கருதுகிறார்கள்.

அடுத்து

பாஜகவின் கணிப்புப்படி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனை அணி, தேர்தலில் போட்டியிடும் ஆறு கட்சிகளில் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தைத்தான் பிடிக்கும் என்று கருதுகிறது. ஒருவேளை, காங்கிரஸ் மற்றும் சிவசேனை இரண்டுமே பின்தங்கினால். அடுத்த வாய்ப்பு சரத் பவார் கட்சிக்குத்தான். ஓரளவுக்கு மகா விகாஸ் அகாதியை காப்பாற்ற அவர் ஒருவர் மட்டுமே இருப்பார்.

தொகுதிப் பகிர்வில் சொதப்பலா?

காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே கட்சிகள் தொகுதிப் பங்கீட்டில் தவறாகக் கணித்துவிட்டதாகவும், வெல்ல முடியாத சில தொகுதிகளை காங்கிரஸ் அடம்பிடித்து வாங்கியிருப்பதாகவும் தொகுதிப் பகிர்வின்போது, மகா விகாஸ் அகாதி கூட்டணிக்குள் ஏற்பட்ட சச்சரவுகள் தொகுதி ஒதுக்கீட்டிலும் எதிரொலித்து, அது பாஜகவுக்கு சாதகமாக மாறியிருக்கிறது.

பிரதமர் மோடியின் பிரசாரம்..

மகாராஷ்டிரத்தில் பிரதமர் மோடி மேற்கொண்ட பிரசாரங்கள், கொடுத்த வாக்குறுதிகள், மஹாயுதி வேட்பாளர்களுக்கு வெற்றிக்கனியைப் பறித்துக்கொடுக்கும் என்று உறுதியாக நம்புகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல், மக்களவைத் தேர்தலில் பெற்ற பாடங்களைக் கொண்டு அடுத்தடுத்து எடுத்த நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த தேர்தல் பணி போன்றவை, தங்களது வெற்றி வாய்ப்பு உறுதி செய்யம் என பாஜக நினைக்கிறது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது வாக்கு எண்ணிக்கையின்போது தெரிய வரும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *