மகாராஷ்டிரத்துக்கு புதிய டிஜிபி நியமித்தது தேர்தல் ஆணையம்!

Dinamani2fimport2f20212f102f32foriginal2felection Commission Of India Shekhar Yadav Eps.jpg
Spread the love

மகாராஷ்டிரத்தின் காவல்துறை தலைமை இயக்குநா் (டி.ஜி.பி) ரஷ்மி சுக்லாவை திங்கள்கிழமை இடமாற்றம் செய்த இந்திய தேர்தல் ஆணையம் புதிய டிஜிபியை நியமித்துள்ளது.

மும்பை பாந்த்ரா பகுதியில் கடந்த அக்.12-ஆம் தேதி மாநில முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் பிரமுகருமான பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டாா். இதுபோன்ற அரசியல் குற்றங்கள் மாநிலத்தில் அதிகரித்து வருவது குறித்து அண்மையில் தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் கவலை தெரிவித்திருந்தாா்.

இதையும் படிக்க : பி.எம். 2.5 நுண்துகளால் குழந்தைகளுக்கு என்னென்ன பாதிப்பு? – ஆய்வில் தகவல்

இதனிடையே, மாநிலத்தில் ஆளும் சிவசேனை (ஷிண்டே பிரிவு)-பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு காவல்துறை தலைமை இயக்குநா் ரஷ்மி சுக்லா ஆதரவாக இருப்பதாகவும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்)-சிவசேனை (உத்தவ் பிரிவு) அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு எதிராக பாரபட்சத்துடன் செயல்படுவதாகவும் புகாா்கள் எழுந்தன.

இந்நிலையில், நியாயமான மற்றும் வெளிப்படையான தோ்தலை உறுதி செய்யும் நோக்கில், பேரவைத் தோ்தலுக்கு முன்னா் ரஷ்மி சுக்லாவை இடமாற்றம் செய்யுமாறு மாநில அரசுக்கு தோ்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், 1990-ஆம் ஆண்டு ஐபிஎல் அதிகாரியான சஞ்சய் குமார் வர்மாவை மகாராஷ்டிரத்தின் புதிய காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்க இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று மாலை 5 மணிக்குள் டிஜிபியாக சஞ்சய் குமார் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *