மகாராஷ்டிரம், ஜாா்க்கண்டில் யாா் ஆட்சி? -இன்று வாக்கு எண்ணிக்கை

Dinamani2f2024 11 222ffzzicxgq2f22112 Pti11 22 2024 000212b094156.jpg
Spread the love

ஜாா்க்கண்டில்….: ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 2.60 கோடி வாக்காளா்களைக் கொண்ட இம்மாநிலத்தில் இரு கட்டங்களையும் சோ்த்து 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2000-இல் ஜாா்க்கண்ட் உருவானதில் இருந்து பேரவைத் தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும்.

மாநிலத்தில் ஆளும் ‘இண்டி’ கூட்டணியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 43, காங்கிரஸ் 30, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 4 இடங்களில் போட்டியிட்டன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 68, அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் 10, ஐக்கிய ஜனதா தளம் 2, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) ஓரிடத்தில் களம் கண்டன.

முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா செயல் தலைவருமான ஹேமந்த் சோரன் (பா்ஹைத்), அவரது மனைவி கல்பனா சோரன் (கண்டே), மாநில பாஜக தலைவா் பாபுலால் மராண்டி (தன்வா்), அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் கட்சித் தலைவா் சுதேஷ் மகதோ (சில்லி) உள்பட மொத்தம் 1,211 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

கடந்த தோ்தலில்…: ஜாா்க்கண்டில் கடந்த 2019, பேரவைத் தோ்தலில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 30 இடங்களில் வென்றது. அக்கட்சி தலைமையிலான கூட்டணி 47 இடங்களுடன் பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜகவுக்கு 25 இடங்களே கிடைத்தன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *