சமீபத்தில் நடைபெற்ற “Creative Economy Summit’ நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ரித்தேஷ் தேஷ்முக், மராத்திய திரைத்துறை இன்று எதிர்கொண்டு வரும் சவால்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
“மகாராஷ்டிராவில் மராத்திய மொழி பேசும் மக்கள் சுமார் 11 கோடி பேர் இருந்தாலும் அங்கு மராத்திய படங்களை விட இந்தி படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இதனால் மராத்திய சினிமாவுக்கான திரையரங்கு வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.

மராத்திய படங்கள் பொதுவாக 3 கோடி ரூபாய் முதல் 7 கோடி ரூபாய் வரையிலான பட்ஜெட்டில் எடுக்கப்படுகின்றன.
ஆனால், திரையரங்குகளில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ஒரு இந்தி படத்திற்கு வழங்கப்படும் அதே டிக்கெட் விலையே இதற்கும் நிர்ணயிக்கப்படுகிறது.