இது குறித்து நாசிக் ஆசிரம பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரின் தந்தை கூறுகையில்,”விடுதியின் செயலால் எனது மகள் உடைந்துவிட்டாள். உங்கள் அமைப்பு ஆரோக்கியமற்றது என்பதற்காக அவர்களை ஏன் இத்தகைய உணர்ச்சிப்பூர்வமான அதிர்ச்சியால் தண்டிக்க வேண்டும்?”என்றார். இது போன்ற நடைமுறை மகாராஷ்டிரா முழுவதும் உள்ள பழங்குடியினர் நலத்துறையால் நடத்தப்படும் ஆசிரம பள்ளியில் இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக இருக்கும் இந்த நடைமுறை குறித்து பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, தாங்கள் அது போன்ற எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று ஒதுங்கிக்கொண்டனர்.
இது தொடர்பாக அத்துறையின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,” இது போன்ற உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. அத்தகைய அங்கீகரிக்கப்படாத கர்ப்ப பரிசோதனையை ஒரு போதும் அனுமதிப்பதும் இல்லை. இது போன்ற செயலில் ஈடுபடும். பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.”என்று தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் மாதமே இது தொடர்பாக குற்றச்சாட்டு வந்தது. ஆனால் அப்போது அரசு பெண்கள் கமிஷன் நடவடிக்கை எடுத்தது. இப்போது மீண்டும் அதே பிரச்னை தலைதூக்கி இருக்கிறது. பெண்கள் நல உரிமையாளர்கள் இது குறித்து கூறுகையில்,”இது ஆணாதிக்க அத்துமீறல்களுக்கு சிறந்த உதாரணம். இந்த நடைமுறைகள் பழங்குடியினப் பெண்களை மேம்படுத்துவதற்கு உள்ள அரசு விடுதிகளின் நோக்கத்தையே குழிதோண்டிப் புதைப்பதாக இருக்கிறது”என்று தெரிவித்தனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கண்டங்கள் எழுந்துள்ளது.